இவர் தான் வெற்றி பெறுவார்! பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் வெற்றி பெறுவார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குபதிவு கடந்த மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது.
இதில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோங்-கும், தீவிர வலதுசாரி தேசியவாத தலைவர் மரைன் லெ பென்னும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இந்நிலையில், இறுதி சுற்றுக்கான வாக்குபதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
தாராளவாத மையமாக விளங்கும் மக்ரோங், ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான ஆதரவாளர் மற்றும் வணிக சார்பு கொண்டவர் ஆவார்.
அவரை எதிர்த்து போட்டியிடும் மரைன் பென் குடியேற்ற எதிர்ப்பு திட்டம் குறித்து தனது பிரசாரத்தில் பேசினார்.
உள்நாட்டு பொருளாதாரத்தில் யூரோவை தடை செய்ய வேண்டும் என கூறிய அவர் ஐரோப்பிய யூனியத்திலிருந்து பிரான்ஸ் வெளியேறுவது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த விரும்புவதாகவும் கூறினார்.
வாக்குபதிவு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இமானுவேல் மக்ரோங் தான் தேர்தலில் வெற்றி பெறுவார் என அதிகம் எதிர்பார்க்கபடுகிறது.
அதே சமயத்தில் வாக்கு சதவீதம் குறைந்தால் அது அவரின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு பின்னர் வாக்குபதிவு முடிவுகள் வெளியாக தொடங்கும் என தெரிகிறது.
No comments: