19 வயதான மனைவி மீது தீயிட்ட கணவன்
புத்தளம் - நல்லன்தலுவ பிரதேசத்தில் ஒருவர் தனது மனைவியை தீயிட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் இரண்டு பேருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் பின்னரே கணவன், மனைவிக்கு தீயிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீக்காயங்களுக்கு உள்ளான பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கணவன், மனைவி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
19 வயதான இந்த இளம் பெண்ணுக்கு இரண்டு வயதான மகன் இருப்பதாகவும் தெரியவருகிறது.
மனைவிக்கு தீமூட்டிய சந்தேக நபர் கடந்த 5 ஆம் திகதி முதல் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: