ஒரு ஆண் ஏன் மிதுன இராசி பெண்ணை காதலிக்க வேண்டும்? காதலிப்பதால் ஏற்படும் சுவாரஸ்யங்கள் எல்லாம் என்ன?
ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணாதிசயம் இருக்கும் என்று கூறுவார்கள். சிலர் படிப்பில் சிறந்து விளங்குவார்கள், சிலர் விளையாட்டில் சிறந்து விளங்குவார்கள், சிலர் மேலாண்மையில் சிறந்து விளங்குவார்கள். அந்த வகையில் விருச்சிகம், மிதுனம் போன்ற இராசிக்காரர்கள் காதலில் சிறந்து விளங்குவார்கள் என சிலர் கூறுகிறார்கள்.
அந்த வகையில், ஒரு ஆண் ஏன் மிதுன இராசி பெண்ணை காதலிக்க வேண்டும்? மிதுன இராசி பெண்ணை காதலிப்பதால் ஏற்படும் சுவாரஸ்யங்கள் எல்லாம் என்ன? இவர்களின் மூலமாக உங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்று நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமா…?
நேர்மை, கடமை, கண்ணியம்
மிதுன இராசி பெண்களுக்கு இயல்பாகவே பயம் இருக்காதாம். தங்களுக்கு என்ன வேண்டும், தாங்கள் எதை விரும்புகிறோம் என்பதை நேரடியாக கூறும் குணம் உடையவர்கள் இவர்கள். அதே போல, உறவில் மிகவும் நேர்மையாக நடந்துக் கொள்வார்களாம் இவர்கள்.
திரில்லிங்கான அனுபவம்
இவர்கள் ஏதாவது செய்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அதிலும் திரில்லாக செய்ய விரும்புவார்கள். வெறுமென இருப்பது இவர்களுக்கு பிடிக்காதாம். முடியாது என்றால் அதை துரத்திப் பிடித்து காட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள்.
எளிதாக நெருங்க மாட்டார்கள்
இவர்கள் அவ்வளவு எளிதாக யாருடனும் நெருங்கி பழக மாட்டார்கள். எனவே, இவர்கள் உங்களோடு நெருங்கி பழகி காதலிக்க வருகிறார்கள் என்றால் சாதாரணமாக இருந்துவிட வேண்டாம். வாய்ப்பு அனைவருக்கும் அமையாது.
வாய் கொஞ்சம் நீளம்
பேசிக் கொண்டே இருப்பார்கள். இன்றைய நாளில் நேரம் இல்லை என்றால், அடுத்த நாளில் கடன் வாங்கி பேசும் அளவு இவர்கள் பேசுவார்கள். ஹ்ம்ம்.. என்று மட்டும் சொல்லாமல், அனைவரும் விரும்பும் வண்ணம் இவர்கள் பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கூர்ந்து கவனிப்பவர்கள்
பேசும் அளவிற்கு, மற்றவர்கள் பேசுவதையும் கூர்ந்து கவனிக்கும் குணம் உடையவர்கள் மிதுன இராசி பெண்கள். நீங்கள் பேசுவதை மட்டுமின்றி, மனதில் நினைப்பதையும் கூட கவனித்துக் கொண்டே இருப்பார்களாம்.
ஆச்சரியப்படுத்துவார்கள்
உங்கள் பிறந்தநாள், சிறப்பு தினங்கள் என்றில்லாமல், அவர்கள் நினைக்கும் போதெல்லாம் உங்களை ஆச்சரியப்பட வைப்பார்கள். வேடிக்கையான செயல்கள் செய்து உங்களை மகிழ்விப்பார்கள்.
உடைகளில் கவனம் செலுத்துவார்கள்
எங்கு சென்றாலும், ஏன் வீட்டிலேயே இருந்தாலும் கூட, நேரத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப அழகாக உடை உடுத்த வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். இந்த விஷயத்தில் மிகவும் கருத்தாக இருப்பார்கள்.
ப்ராக்டிகலான நபர்
திரில்லிங், விளையாட்டுத்தனம் என ஜாலியாக இருந்தாலும், இவர்களுக்குள் ஓர் சீரியசான நபரும் இருப்பார். முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது, மிகவும் ஆராய்ந்து தான் எடுப்பார்கள்.
புதிய பறவை
எந்த ஒரு விஷயங்களையும், அலுப்பூட்டும் வகையில் ஒரே மாதிரி செய்யாமல், புதியதாக முயற்சிக்க விரும்புவர்கள் மிதுன இராசி பெண்கள்.
விளையாட்டு பெண்கள்
படுக்கையில் சுட்டியாக இருப்பார்களாம் மிதுன இராசி பெண்கள்.
பாசிட்டிவ் எனர்ஜி
எந்த ஒரு செயலையும் வேறு கண்ணோட்டத்தில் வித்தியாசமாக பார்க்கும் குணம் மிதுன இராசி பெண்களுக்கு உண்டு. எல்லாம் நன்மைக்கே என்று பாசிட்டிவாக எடுத்துக் கொள்வார்கள்.
No comments: