இலங்கைக்கு செல்லவில்லை என்றால் நான் தைரியம் இல்லாதவனா? ரஜினி
அரசியலுக்கு வருவதா இல்லையா என்பது தொடர்பில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
எட்டு வருடங்களின் பின்னர் ரசிகர்களை நேரடியாக ரஜினிகாந்த சந்தித்து உரையாற்றினார். இது தொடர்பான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ரஜினி,
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு தர நேர்ந்தது. அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. அன்று முதல் தேர்தல் சமயங்களில் சில ஆதயாத்துக்காக ரசிகர்களை பயன்படுத்துவதால் இப்போதெல்லாம் நான் யாருக்கும் ஆதரவு வழங்குவதில்லை.
என் ரசிகர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்பற்காக இவ்வாறு சொல்கிறேன்.
அடுத்து என்ன நடக்கும் என்பதை ஆண்டவன் தான் தீர்மானிக்கிறான். இப்போது நடிகனாக என்னுடைய கடமையை செய்து வருகிறேன். நாளை என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதில் நியாயமாகவும் உண்மையாகவும் இருப்பேன். அது கடவுளின் கையில்தான் உள்ளது.
என்னை பற்றிய அரசியல் செய்திகளை நம்பவேண்டாம். அப்படி நான் வரவேண்டிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக வருவேன். நான் அரசியலுக்கு வந்தால் ஊழல் செய்பவர்கள், பணம் சாதிக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள மாட்டேன். ரசிகர்கள் முதலில் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். குடிப்பழக்கம், மதுப்பழக்கத்தை கைவிடுங்கள். அடிபட்டதால் இதை சொல்கிறேன். சந்தோஷமாக இருங்கள்.
இலங்கை போவதாக இருந்தது. அதுவும் சில காரணத்தால் போக முடியாமல் ரத்து செய்யப்பட்டது. உடனே, ஊடக நண்பர்கள் ரஜினி எதிலுமே திடமாக நிற்க மாட்டார். அனைத்தையும் ரத்து செய்துக் கொண்டே இருப்பார். முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பார். தயங்குகிறார், பயப்படுகிறார் என்றெல்லாம் எழுதினார்கள்.
நான் ஒரு விஷயம் முடிவு எடுத்தால், ரொம்ப யோசிப்பேன். சில முடிவுகள் எடுத்தவுடன் தான் பிரச்சினைகள் இருக்கிறது என்பது தெரியும். நாம் கொஞ்சம் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். தண்ணீருக்குள் காலை வைக்கிறோம். காலை வைத்தவுடன் தான் தெரிகிறது உள்ளே நிறைய முதலைகள் எல்லாம் இருக்கிறது என்று. காலை பின்னால் எடுக்கவில்லை என்றால் பிரச்சினையாகி விடும். முரட்டு தைரியம் எல்லாம் இருக்கக் கூடாது. பேசுகிறவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள் என ரசிகர்கள் முன்னிலையில் ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார்.
No comments: