சிறையில் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட கல்லூரி மாணவி !
தமிழகத்தின் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய மாணவியை கைது செய்த காவல்துறையினர் சிறையில் நிர்வாணப்படுத்தி சித்ரவதைக்கு உட்படுத்தியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்தவர் வளர்மதி.
இவருக்கு ஆதரவாக சுவாதி, தினேஷ்குமார், கார்த்திக் உள்ளிட்ட பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த ஏழு கல்லூரி மாணவர்கள் கோயம்புத்தூரில் இருந்து நெடுவாசல் செல்லும் வழியில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட இந்த மாணவர்களை சிறை நிர்வாகம் சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக பெண்களை சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததாக கூறப்பட்டது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி பிணையில் வெளிவந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, சிறையில் எங்களை சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தினார்கள்.
மேலும் எங்களை சொல்ல தகாத வார்த்தையில் திட்டினார்கள் என்று அந்த மாணவி துணை ஜெயிலர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
No comments: