முல்லைத்தீவில் காணி உரிமை கோரும் சீனப் பிரஜை
முல்லைத்தீவு - முள்ளிவாய்கால் பகுதியில் உள்ள தனது 40 ஏக்கர் சொந்த நிலத்தை மீளப் பெற்றுத் தருமாறு சீனப் பிரஜை ஒருவர் கோரியுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது குறித்த இடத்தை கடற்படையினர் ஆக்கிரமித்து 600 ஏக்கர் நிலப்பரப்பில் முகாம்களை அமைத்துள்ளனர் என்றும் சீனப் பிரஜை குற்றம் சுமத்தியுள்ளார்.
"அந்த பகுதியில் விவசாயம் மேற்கொள்வதற்காக அனுமதி பெற்று அந்த நிலத்தை எனது பெற்றோர்கள் கொள்வனவு செய்தார்கள்" என்றும் சீனப் பிரஜை கூறியுள்ளார்.
குறித்த சீனப் பிரஜையின் தாய் இலங்கையை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: