சமந்தாவின் திருமண தேதி உறுதியானது - தேதி இதோ
நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படு பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் காதல் வயப்பட்டு பிறகு ஜனவரி 29 ம் தேதி பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தத்தில் முடிந்தது.
ஆனால் அச்சமயத்தில் திருமண தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு பேருக்குமே சில படங்கள் கையில் இருந்ததால் உடனே அறிவிக்க முடியவில்லையாம்.
தற்போது இவர்களின் திருமணம் அக்டோபர் மாதம் 6 ம் தேதி நடைபெறும் என்று நாக அர்ஜூனா தரப்பில் அறிவித்துள்ளனர்.
திருமணத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
No comments: