வயோதிப பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை!
ராகம, நாரன்கொட பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தவயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
விதானஆராச்சிகே எசிலின் என்ற 78 வயதான வயோதிப பெண் ஒருவரின் சடலமே இவ்வாறுமீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10ம் திகதி மீட்கப்பட்ட இந்த சடலம் தொடர்பிலான மரணம் விசாரணை அறிக்கைதற்போது வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த வயோதிபப் பெண் ,வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்துநெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கங்கானி தங்கஹவத்த மகரநீதிமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
உயிரிழந்த வயோதிப பெண், தனது வயோதிப கணவர் மற்றும் மகனுடன் அந்த வீட்டில்வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் கடந்த 10ம் திகதி அவரது மகனால் பொலிஸ் நிலையத்தில்அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ராகமபொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
No comments: