Header Ads

Header Ads

இந்தியாவில் மருத்துவ சேவைகளை வழங்கும் லைகா பிரேமா சுபாஸ்கரன்

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஹெல்தின் வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) மருத்துவ மையம் கடந்த 10 ஆம் திகதி புதன்கிழமை (10.05.17) திறந்து வைக்கப்பட்டது. லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், லைக்கா ஹெல்த்தின் தலைவி திருமதி பிரேமா சுபாஸ்கரன், லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி, லைக்கா ஹெல்த்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் மன்பிரீட் குலாத்தி, ஆகியோர் உட்பட லைக்கா குழுமத்தின் உயர் அதிகாரிகளும் இந்திய மருத்துவத்துறைசார் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தார்கள்.
லைக்கா ஹெல்தின் வெஸ்ட் மின்ஸ்டர் (Westminster) மருத்துவ மையத்தை சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் இந்த திறப்புவிழா நிகழ்வில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கர் ஆகிய பல திரைத்துறை முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்
லைக்கா குழுமத்தில் ஒன்றான லைக்கா ஹெல்த் இன் இந்த சிகிச்சைநிலையத்தில் பரிசோதனை, மருத்துவஆலோசனை மற்றும் சிகிச்சை என்பன அதி நவீன தரத்தில் வழங்கப்படவிருக்கிறது. மேலும் அடுத்து வரும் 5 வருட காலத்தில் மருத்துவம் மற்றும் நோய் கண்டறியும் விடயத்திற்காக மேலதிகமாக 100 மில்லியன்ஸ் பவுண்ஸ் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
வெஸ்ட் மின்ஸ்டர் (Westminster) கெயார் ஹெல்த் கெயார் திட்டத்தின் அங்கமாக வெளிநோயாளர்களுக்கு மருத்துவசேவையை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவநிலையம் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஹெல்த்தின் முதலாவது மையம் என்பதுடன் சென்னை மாநகரின் மையப் பகுதியில் 70000 சதுர அடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
“லைக்கா ஹெல்த் ” ஆனது “வெஸ்மின்ஸ்டா் (Westminster) ஹெல்த் கெயர்” என்கின்ற புதிய அதிநவீன மருத்துவ மையத்தினை சென்னையில் திறந்து வைத்திருக்கிறது என “லைக்கா ஹெல்த்தின் தலைவி பிரேமா சுபாஸ்கரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் “லைக்கா ” குழுமத்தின் “லைக்கா ஹெல்த் கெயர்” ஆனது “வெஸ்மின்ஸ்டா் (Westminster) ஹெல்த் கெயர்” என்கின்ற புதிய அதிநவீன மருத்துவ மையத்தினை சென்னையில் அமைத்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள இரண்டு நிலையத்துடன், 70000 சதுரஅடி பரப்பளவைக் கொண்ட இந்தப் புதிய மருத்துவ மையமானது இருதய மருத்துவம், கண் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண், காது, மூக்கு தொடர்பான மருத்துவம், இரப்பை மற்றும் குடல் தொடர்பான மருத்துவம், எடை குறைப்புத் தொடர்பான மருத்துவம், எலும்பியல் தொடர்பான மருத்துவம், பிசியோதெரபி, இயன் மருத்துவம் போன்ற பல மருத்துவ சேவைகள் உள்ளடங்கலான மருத்துவ சேவைகளை முழு அளவில் வழங்கவுள்ளது.
தொழில் நுட்பத்தை மையப்படுத்தும் இப்புதிய மருத்துவ மையமானது வருமுன் காக்கும் மருத்துவம் மற்றும் நவீன மருத்துவ வசதிகளுக்கான விரைவான பிரவேசம் என்பன அடங்கிய சேவைகளை கொண்டுள்ளது. அத்துடன் இந்திய மருத்துவ நிபுணர்களின் திறன்களையும் நிபுணத்துவத்தையும் கொண்டு பிரித்தானியாவில் பின்பற்றப்படும் தரங்கள், நெறிமுறைகள் மற்றும் மருத்துவ வழிகாட்டல்களிற்கமைய மருத்துவ சேவைகளை வழங்கும்.
3 Tesla எம்.ஆர்.ஐ. ஸ்கானர் உடன் பரந்த விட்டம், குறுகிய குடைவு மற்றும் மிக குறைந்த கதிர்வீச்சுக் கொண்ட உயர் துலக்கமான CT ஸ்கானர், எண்ணியல் X- கதிர், அல்ட்ராசவுண்ட்டுடன் எகோகார்டரிக் போன்றவற்றை உபயோகிக்கும் நவீன மருத்துவப் புதுமைகள் அடங்கிய சேவைகளை இப்புதிய சுகாதார மருத்துவ நிலையமானது வழங்கும். மருத்துவ அறிக்கைகள், விரைவானதாகவும் திறன்பேசி போன்ற கையடக்க சாதனங்களின் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் பெறக் கூடியதாக வழிவகை செய்யப்படும்.
வீடியோ கருத்தரங்க வசதிகளானது இந்த மருத்துவ மையத்தின் ஒவ்வொரு மருத்துவ ஆலோசனை அறைகளிலும் பொருத்தப்பட்டிருப்பதால், தகவல்கள்,கருத்துகள் மற்றும் நிபுணத்துவத்தினை இலகுவாக லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் மருத்துவர்கள் மற்றும் கதிரியக்க வல்லுநர்களுடன் ஒரே நேரத்தில் பகிர்ந்துகொள்ளலாம்.
“வெஸ்மின்ஸ்டா் (Westminster) ஹெல்த் கெயர் இனைத் திறந்து வைப்பது ஒரு மகத்தான இலக்கு எனவும் இந்த அதிநவீன மருத்துவ மையமானது மருத்துவ விஞ்ஞானத்துடன் உயர் தரமான பராமரிப்புச் சேவைகளை கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த நிலையமானது, சென்னையில் அதிகரித்து வரும் வணிகப் புள்ளிகளுக்கு மத்தியில், இந்தியாவிலேயே எடுத்துக்காட்டாக ஐந்து நட்சத்திர மருத்துவ சேவைகளை வழங்குவதாக அமையும்” என “லைகா ஹெல்த்தின் தலைவி பிரேமா சுபாஸ்கரன் கருத்துத் தெரிவித்தார்.
“தொழிலதிபர்கள் மருத்துவ மையத்தின் கதவுகளினூடாக வரும் போது தாம் மருத்துவருடன் ஒரு ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்கான சந்திப்புக்கு வருவது போன்று உணர வேண்டும், என நான் அடிக்கடி லண்டனிலிருக்கும் எமது நிலையத்திலுள்ள அணிக்குச் சொல்லுவேன். இதனையே நாம் உருவாக்க விரும்பினோம் ”, என “லைக்கா ஹெல்த் ” மற்றும் “வெஸ்மின்ஸ்டா் ஹெல்த் கெயர்” இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் டாக்டர் மன்பிரீத் குலாத்தி கூறினார்.
லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, லைக்கா ஹெல்த்தின் தலைவி பிரேமா சுபாஸ்கரன், லைக்கா குழுமத்தின் டாக்டர் மன்பிரீத் குலாத்தியுடன், நிர்வாக இயக்குனர் மற்றும் இணை நிறுவனராகிய சென் . கந்தையா ஆகியோரின் கூட்டு முயற்சியில், இந்த அற்புதமான புதிய முயற்சி உருவாக்கப்பட்டது.
புதிய மருத்துவக் கருவிகளை எப்படிக் கையாளுவது என்பது குறித்து தொழினுட்ப வல்லுனர்களுக்குக் கற்பிப்பதற்காக “பிலிப்ஸ் வெஸ்மின்ஸ்டா் பயிற்சி நிலையம்” என்பதனையும் “லைகா ஹெல்த்” தொடங்கவுள்ளது. சென்னைக்கும் சென்னைக்கு வெளியிலும் உள்ள மருத்துவ நிபுணர்களுக்கான புதிய தொழினுட்ப அறிவு மையமாக இந்த மருத்துவ மையம் தொழிற்படவுள்ளது.
பிரித்தானியா மற்றும் இந்தியாவில் இயங்கும் மருத்துவ சுகாதார மையங்களின் வெற்றிகரமான இயங்குதலின் மூலம், உலகெங்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குறைந்த செலவில் அணுகக் கூடியவாறான சுகாதார மருத்துவ நிறுவனங்களிற்கு எதிர்காலத்தில் நிதி வழங்குதலை “லைகா ஹெல்த்” நோக்காகக் கொண்டுள்ளது.

No comments:

Powered by Blogger.