வவுனியாவில் தொடரும் யானைகளின் அட்டகாசம்
வவுனியாவில் ஓமந்தை பிரதான கண்டி வீதியைக் கடந்து நேற்று இரவு (07) இரவு மாணிக்கர்வளவு பகுதிக்குள் யானை ஒன்று புகுந்து குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தியுள்ளது.
குறித்த யானை மாணிக்கர்வளவிலுள்ள இரண்டு வீடுகளையும், பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
இதேவேளை, காயன்குளம் பகுதிக்கு சென்று அங்கு யாரும் அற்ற வீட்டின் ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்திவிட்டு காட்டுப்பகுதியை நோக்கி சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
No comments: