நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
நாட்டின் பல பிரதேசங்களில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய தென் மற்றும் மேல் மாகாண கடல் பிரதேசங்களில் கடுமையான மழை பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக மழை பெய்யும் பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும். இதன்போது இடி, மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுள்ளது.
No comments: