பிரித்தானியாவில் இரண்டாம் உலகப்போர் குண்டு
பிரித்தானியாவின் Birmingham-நகரத்தின் Aston பகுதியில் இரண்டாம் உலகப்போர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள A38 Aston Expressway பாலம் அவசரமாக மூடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து Lichfield சாலையும் மூடப்பட்டுள்ளது.
இதனால் அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குண்டுகள் இருப்பதை பொலிசாரும் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக அப்பகுதியின் அருகே தொழிற்சாலையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
No comments: