ஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன்
ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக உணவுக்காக குப்பை பொறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சுற்றுலா மேற்கொள்வதற்கு சிறந்த இடமாக விளங்கும் பிலிப்பைன்ஸில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றப்படுவது அதிகமாக நடக்கிறது.
அந்த வகையில் கிறிஸ்டோப் எனும் 49 வயது ஜேர்மானிய நபர் ஒருவர், பிலிப்பைன்ஸில் உள்ள பெண்ணை தீவிரமாக காதலித்துள்ளார்.
சமூக வலைதளம் ஒன்றில் சந்தித்து கொண்ட இருவரும் நாளடைவில் காதலர்களாக மாறியுள்ளனர். பெண்ணை கண்டதுமே காதலிக்க தொடங்கிய கிறிஸ்டோப் அந்த பெண்ணை பின்னர் ராணி மாதிரி பார்த்துக்கொண்டுள்ளார்.
தன்னை கண்மூடித்தனமாக விரும்புவதை அறிந்த அந்தப்பெண் நேரம் பார்த்து கிறிஸ்டோபின் பணம், கடவுச்சீட்டு, விசா மற்றும் உடமைகள் அனைத்தையும் திருடிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த ஜேர்மானிய நபர் ஒருகட்டத்தில் தேடுவதை நிறுத்தி பிழைத்துக்கொள்ள வழி தேடியுள்ளார்.
பிலிப்பைன்ஸில் யாரையும் தெரியாது என்பதால் தெருக்களில் குப்பை பொறுக்கி கொண்டும், பிச்சை எடுத்துக்கொண்டும் கடந்த 8 ஆண்டுகளாக கிறிஸ்டோப் பிழைப்பு நடத்தி வருகிறார்.
இதனிடையே பிலிப்பைன்ஸ் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் கிறிஸ்டோப் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட பிறகு தான் இது போன்ற சிக்கலில் கிறில்டோப் இருப்பது தெரியவந்தது.
இது போன்று அதிக அளவில் பிலிப்பைன்ஸில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. பேஸ்புக் பாதிவைப் பார்த்து கிறிஸ்டோபை அவரது உறவினர்கள் தேடி வருவார்கள் என்று நம்புகின்றனர்.
No comments: