Header Ads

Header Ads

பெண்ணொருவர் எடுத்த சோகமான முடிவு: அவர் செய்தது சரியா ?

இவரின் மனைவி சுதா மல்லிகா(28). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
மருத்துவ மேற்படிப்பு படிக்க வேண்டியிருந்ததால், குழந்தையை சரியாக பார்த்துக்கொள்ள முடியாது என கருதிய சுதா, ஈரோட்டில் உள்ள தனது பெற்றோரிடம் தனது குழந்தையை ஒப்படைந்திருந்தார். நேரம் கிடைக்கும் போது, அவ்வப்போது ஈரோடு சென்று குழந்தையை பார்த்து வந்தார்.
சில சமயம் வேலை மற்றும் படிப்பு காரணமாக, தனது குழந்தையை பார்க்க செல்ல முடியாமல் நேரிடும். இதனால், தனது மகனை சந்திக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் சுதா மல்லிகா இருந்ததாக தெரிகிறது. நாளடைவில் இதுவே மன உளைச்சலாக மாறியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் பதட்டம் அடைந்த சதீஷ்குமார், நேராக வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, ஒரு அறையில் தனது துப்பட்டாவால் சுதா மல்லிகா தூக்கிட்டு இறந்து கிடந்தார். மேலும், ஒரு கடிதத்தையும் சுதா மல்லிகா எழுதி வைத்திருந்தார். அதில், தனது மகனை பார்க்க முடியாமல் தாய்பாசத்தில் தவிக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் மறைவு அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரை விடத்துணிந்த சுதா மல்லிகாவிற்கு தனது வேலையை விட தோன்றவில்லை என்பது காலத்தின் கட்டாயமா இல்லை யதார்த்தமா என சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

No comments:

Powered by Blogger.