இந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நடக்குமாம்
திருமணம் எனும் இனிய பந்தமான இல்லற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம்.
இரண்டு திருமணம் அமையும் ராசி எது?
ஜாதக நிலையில் குடும்பஸ்தானம் மற்றும் களத்திரஸ்தானம் எனும் இரண்டு நிலைகளும், மிகவும் முக்கியமான நிலைகளைப் பெறுகின்றது.
இவற்றில் அமையும் ஸ்தானங்களின் கிரகத்தன்மை பல வகையில் தம்பதியர்களின் குடும்ப வாழ்வில் குழப்ப நிலைகளை கொடுத்து விடுகின்றது.
எனவே இதனால் ஜாதக கிரக நிலையில் குடும்ப களத்திரஸ்காரகன் என்று அமைகின்ற கிரகங்களின் தன்மைகளும், அதன் செயல்பாடுகளும் மிகவும் முக்கியமானதாகும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்த பலருக்கு இரண்டு தாரப்பலன் அமையும் நிலை ஏற்படுகின்றது. இது ஜோதிட நூல்களிலும் கூறப்பட்டு இருக்கின்ற விஷயமாகும்.
இதற்கு சந்திர சுக்கிர சேர்க்கை தான் உரிய காரணமாக ஆய்வு ஒன்றை மேற்கொண்ட போது தெரியவந்துள்ளது.
துலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்சிகம் ராசியிலேயே சந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலையும், துலா ராசிக்கு சுகபோகஸ் தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும் இந்த இரண்டு மனைவி அமையும் நிலைக்கு காரணமாகின்றது.
சித்திரை, சுவாதி, விசாகம் எனும் நட்சத்திரங்களின் அதிபதிக் கிரகமான செவ்வாய், ராகு, குரு என்கின்ற கிரகச் சேர்க்கையும் இதற்கு காரணமாகின்றது.
எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமையும் பலன் எனும் நிலை அமைகின்றது.
ஆனால் இது முழுதாக அனைத்து துலாம் ராசிக்கும் அமையாது. மேற்கூறிய குடும்ப களத்திர நிலை கிரகங்களின் சேர்க்கையும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே இரண்டு தார பலன்கள் அமையும்.
இரண்டு திருமணம் அமையும் ராசிக்காரரின் ஜாதக நிலை எப்படி இருக்கும்?
ஒருவரின் ஜாதகத்தில் களத்திரம் எனும் 7 ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களின் நிலையில் அமைவதும், களத்திரஸ்தான நிலைக்கு உரிய கிரகம் நீசபங்க நிலை பெற்றாலும், அது இரண்டு தாரப் பலனைக் கொடுக்கும்.
அதேபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை, சுக்கிரன், குரு சேர்க்கை என்று ஜாதகத்தில் அமையும் நிலையும் கூட இரண்டு தார பலனை கொடுக்கும்.
No comments: