14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று பிள்ளைகளின் தந்தை!
புத்தளம் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய நபரே குறித்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் என ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமையவே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: