கனடாவில் மனைவிக்காக கொலை செய்த இலங்கையர்
அமலன் தண்டபாணிதேசிகர் என்ற இலங்கையர் அயல் வீட்டில் உள்ளவரை குத்தி கொலை செய்தார் என கனேடிய நீதிபதியினால் இனங்காணப்பட்டுள்ளது.
முதன் முதலில் தண்டபாணிதேசிகர் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டார். பின்னர் அவர் குறைந்த குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புடையவர் என இனங்காணப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்தவரால் தண்டபாணிதேசிகரின் மனைவி அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
இருந்த போதிலும் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை கேட்ட பின்னர் தண்டபாணிசேகரனினால் கொலை செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கலாம் என இன்னமும் ஜூரி குழுவினரால் நம்பப்படவில்லை.
அவரது விசாரணையின் போது, 2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதி ஜெயராசன் மாணிக்கராஜாவை தான் குத்தியதாக தண்டபாணிதேசிகர் ஒப்புக் கொண்டார்.
ஜெயராசன் மற்றும் தண்டபாணிக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது தமிழில் தவறான வார்த்தைகளினால் பல முறை ஜெயராசன் தன்னை அழைத்தார் எனவும் அதன் பின்னரே ஆத்திரத்தில் தான் குத்தியதாக தண்டபாணிதேசிகர் சாட்சியம் அளித்துள்ளார்.
இதன்போது தண்டபாணிக்கு ஆயுள் தண்டனை கிடைத்த போதிலும் அவருக்கு 10 முதல் 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டபாணியின் பரோல் தகுதிக்கமைய அவர் குறைந்தது 25 வருட சிறை தண்டனையை அனுபவிக்கும் வாய்ப்புக்களே உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய எதிர்வரும் 29ஆம் திகதி தண்டபாணியின் பரோல் தகுதி தொடர்பான வாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: