இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றிபெற்றால் எரிபொருள் விலை குறைக்கப்படும்
எதிர்வரும் ஜுன் மாதம் 8ஆம் திகதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் தெரிவுசெய்யப்படின், தற்போது நிலவும் நியாயமற்ற எரிபொருள் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விலை உயர்வினால் எரிபொருள் சந்தை முடங்கிக் கிடப்பதாகவும், எனவே அதில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்வினால் உழைக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கன்சர்வேடிவ் கட்சியின் விலை குறைப்பு தீர்மானத்தினால் சுமார் 17 மில்லியன் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.
No comments: