கப்பம் கோரி வைபரிலும் மிரட்டல்: பின்னர் வாள் கொண்டு வந்து அவரை வெட்டிய கும்பல் யார் ?
யாழ்.நவாலிப் பகுதியில் உள்ள கடையொன்றினுள் வாள்களுடன் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம் மே தினத்தன்று இரவு 10 மணியளவில் நவாலி சிந்தாமணி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள பலசரக்கு கடை ஒன்றுக்கு, இரு மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் துணிகளால் தமது முகத்தை மறைத்த வண்ணமே இருந்துள்ளனர்.
கடைக்கு வந்த குழுவினர் அடாவடியில் ஈடுபட்டவேளை கடை உரிமையாளர் கடையின் பின் பக்கத்தால் தப்பித்து ஓடியுள்ளார். அவ்வேளையில் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அகப் பட அவரை வாள்களால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றுள்ளது.
மேற்படி தாக்குதல் சம்பவத்தில் சத்தியதாசன் ராஜநேசன் (வயது24) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார்.படுகாயமடைந்த பிரஸ்தாப இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு உடனடியாக வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். இதேவேளை குறித்த சம்பவ தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடை உரிமையாளரின் தொலைபேசிக்கு வைபர் செயலி மூலம், அழைப்பு ஒன்று விடுத்து கப்பம் கேட்டு மிரட்டியுள்ளார்கள் என்றும் விசாரணையின் போது கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்

No comments: