கையூட்டலை ஆதரிக்கும் ஆர்ப்பாட்டம்..! அதிபரே அவதானம்..!
வன்னி மீடியா செய்திப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து விசேட புலனாய்வுச் செய்திசேகரிப்பின் மூலம் நேற்று முன்தினம்பு துக்குளம் கனிஷ்ட வித்தித்தியாலகத்தில் கடமையாற்றும் அதிபரின் இலஞ்ச ஊழல் உள்ளிட்ட பல தகவல்களை பொதுமக்களுக்குச் செய்தி மூலம் தெரியப்படுத்தியிருந்தோம்.
குறித்த செய்தியின் உண்மைத்தன்மை தெரிந்தும் பாடசாலை அதிபரின் ஆதரவாளர்கள் சிலரால் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டமை வேதனைக்குரிய விடயம்.
வவுனியாவில் முன்னிலையில் இருக்கும் பாடசாலைகளில் புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயமும் ஒன்று கடந்த 03 வருடங்களாக புலமைப்பரிசில் போட்டிப் பரீட்சையில் 100 வீதம் தேர்ச்சிமட்டமடைந்துள்ளமை இங்கு குறிப்பிட்டு காட்டவேண்டியது அவசியம்.
வுலயமட்டம், மாவட்டமட்டம், மாகாணமட்டம், தேசியமட்டமென கல்வியில் தன்னிகரற்ற பாடசாலையாக விளங்குகின்றது. குறித்த பாடசாலையின் வளர்ச்சியில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள், என்பவர்களுக்கு 100 வீதமான பங்கு இருக்கின்றது இதை யாராலும் மறுக்க முடியாது.
வன்னி மீடியா செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்ட செய்தி பாடசாலைக்கோ அல்லது ஆசிரியர்களுக்கோ, மாணவர்களுக்கோ, பழையமாணவர்களுக்கு எதிரான செய்தியில்லை என்ற விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
இவ்வாறு தரமான பாடசாலையையும் அதன் பௌதீக வளங்களையும், பெற்றோர்களையும், மாணவர்களையும் பழையமாணவர்களையும் முதலீடதக வைத்து கல்வியை வியாபாரமாக நடாத்தும் அதிபருக்கு கல்வித்துறையில் சம்மந்தப்பட்ட உயரதிகாரிகள் விசாரணை நடாத்தி தகுந்த தண்டனை வழங்கவேண்டும். இதைப் பாடமாக வைத்து எதிர் காலத்தில் எந்த ஒரு ஆசிரியர்களோ, அதிபர்களோ வியாபாரம் நடாத்துவதற்கு சிந்திக்ககூடாது.
பாடசாலையின் பெயருக்கு தீங்கு விழைவிக்கும் வகையில் இந்தச் செய்தியைப் பிரசுரிக்கவில்லை. ஒரு சில பழைய மாணவர்கள் தங்கள் பாடசாலைக்கு எதிரான செய்தி என்று நினைத்து சீற்றம் கொள்கின்றனர். உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கின்றது. எம்மால் பிரசுரிக்கப்பட்ட செய்தியில் ஒரு இடத்திலேனும் பாடசாலைக்கு இழுக்கு வரக்கூடிய வசனங்கள் பயன்படுத்தவில்லை.
உங்கள் பாடசாலையில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்துங்கள் குறித்த அதிபரின் முறைகேடான விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்குத்தான் உள்ளது.
அதிபர் தன் செய்த தவறை மறைப்பதற்காக பாடசாலையின் வளங்களைப் பயன்படுத்துகின்றார்.
பாடசாலை அதிபர் மாணர்களிடமிருந்து தங்கநகை கையூட்டலாக வாங்கவில்லை என்பதை கூறமுடியுமா..?
குறித்த பாடசாலையில் கடமையாற்றும் அதிபர் இலஞ்சம் வாங்கியமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் வெளியிடுவோம்..?
பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள் கண்மூடித்தனமாக செயற்படாமல் சற்று தீரை விசாரித்துப் பாருங்கள் உண்மை உங்களுக்கு புலப்படும்...
பாடசாலை கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஏதேனும் இடையூறு ஏற்படும் சந்தர்ப்பத்தில் நாளை ஆதாரங்கள் வெளியிடப்படும்.
No comments: