சுஜா வருணியுடன் சினேகன் விடிய விடிய செய்த வேலை…!!
பிக்பாஸ் வீட்டில் நேற்று அலாரம் பஸர் வைக்கப்பட்டிருந்தது. இதனை யார் முதலில் அழுத்துகிறார்களோ அவர்கள் அடுத்த வார எவிக்ஷனுக்கு நேரிடையாக தேர்வு செய்யப்படுவார்கள்.
இது தெரியாமல் ஆரவ் அதனை அழுத்தி விட்டார். இதனால் அவர் அடுத்த வார எவிக்ஷனுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் பிக்பாஸ் இந்த எவிக்ஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் புதிய போட்டியார்களுக்கு ஒரு டாஸ்கை கொடுத்து, அதில் தோற்பவருக்கு மாற்றி விடலாம் என்று கூறியது. அதன்படி அந்த எவிக்ஷனை சுஜா வருணிக்கு ஆரவ் மாற்றி விட்டார்.
இதனால் சுஜா வருத்தத்தில் இருந்தார். இதனை உணர்ந்த பிக்பாஸ் சுஜா வருணியை அழைத்து எவிக்ஷனில் இருந்து தப்பிக்க பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்றொருவருடன் இணைந்து இரவு முழுவதும் விடிய விடிய ஒரு டாஸ்கை செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் எவிக்ஷனில் இருந்து தப்பலாம் என்றது பிக்பாஸ். இதனால் மகிழ்ச்சி அடைந்தார் சுஜா வருணி.
இது குறித்து சினேகனிடம் தன்னுடைய நிலையை கூறி இரவு முழுவதும் தன்னுடன் ஒத்துழைக்குமாறு கூறினார்.
அதற்கு சினேகனும் ஒப்பு கொண்டார். அதன்படி ஒரு புறத்தில் சினேகனும், மற்றொரு புறத்தில் சுஜா வருணியும் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு கூடையில் உள்ள பந்துகளை மற்றொரு கூடையில் நிரப்ப வேண்டும்.
இப்படியாக இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய செய்தனர். இதில் தப்பினாரா இல்லையா என்பது இன்று தெரிய வரும்.
No comments: