வெளியில் வந்து ஓவியாவிடம் சிக்கி சின்னா பின்னமான காயத்ரி
பிக்பாஸ் வீட்டிலிருந்து மக்களின் ஒட்டு அடிப்படியில் வெளியேற்றப்பட்டார் காயத்ரி ரகுராம். தற்போது வீட்டில் இருக்கும் அவர் சும்மா இருக்க முடியாமல் பிக்பாஸ் குறித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் பலரும் திட்டி ரீ-ட்வீட் போட்டதால் அதனை அந்த பக்கத்திலிருந்து நீக்கினார்.
இந்நிலையில் வீட்டில் இருக்கும் தன் நாயுடன் போட்டோ எடுத்து 'ஐயம் பேக் ' என ட்வீட் போட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டில் சுஜா வருணி 'ஓவியா கம்மிங் சூன்' என கோலம் போட்டிருந்தார்.
இதனை கிண்டல் செய்யும் விதமாக, "ஓவியாவை போல இருக்க ஆசைப்பட்டு சுஜா வாருணி ஒரிஜினாலிட்டியை இழந்து வருகிறார்" என ட்வீட் போட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் காயத்ரியை கழுவி ஊத்த ஆரம்பித்துவிட்டனர்.
'இதெல்லாம் நீங்க சொல்ல கூடாது கால்சியம் மேடம்' என ரசிகர்கள் கூற என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகிறார் காயத்ரி.
No comments: