கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவரை கொன்று புதைத்த மனைவி
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலன் உதவியுடன் கொலை செய்து புதைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் நீலகரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் (30) இவர் மனைவி இந்து (25) இவர்களுக்கு ஜியோன் என்ற 2½ வயது மகன் உள்ளான். ஜஸ்டின் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்த ஜஸ்டின் மனைவியை அழைத்து ஓசூருக்கு வந்து வாடகை வீடு எடுத்து தங்கினார்.
இதனிடையே கடந்த 20-ஆம் திகதி ஜஸ்டின் மாயமானார். மேலும் அவரது வீடு முழுவதும் ரத்தக்கறைகள் படிந்திருந்தன.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்தனர். பொலிசார் இந்துவிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரே நேற்று பொலிசில் சரணடைந்தார்.
தனது கணவரை கள்ளக்காதலன் லிண்டோ (30) உதவியுடன் கொலை செய்து புதைத்து விட்டதாகவும் கூறினார்.கொலை தொடர்பாக இந்துவிடம் விசாரணை நடத்தப்பட்டதில் கிடைத்த தகவல் வருமாறு:
இந்துவிற்கும், லிண்டோவிற்கும் கடந்த 1½ ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது.
கடந்த 2 வாரத்துக்கு முன்னர் ஜஸ்டின், இந்துவை ஓசூருக்கு அழைத்து வந்த நிலையில், லிண்டோவுக்கு போன் செய்த இந்து அவரை அங்கு வரவழைத்தார்.
பின்னர், அவர் உதவியுடன் தூங்கி கொண்டிருந்த ஜஸ்டினை இந்து வீட்டில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
அதன்பிறகு லிண்டோ சடலத்தை கொண்டு சென்று புதைத்ததுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கொலையில் தப்பி ஓடிய லிண்டோவை பொலிசார் தேடி வருகிறார்கள்.

No comments: