இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு? பிரதான சந்தேகநபருக்கு ஏற்பட்டுள்ள நிலை!
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று யாழ். நீதவான் நீதிமன்றில் மேலதிக நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த சந்தேகநபர் தமது நிலைப்பாட்டை மன்றில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், “என்னை தனி அறையில் அடைத்து வைத்திருப்பதால் மனுஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. தயவு செய்து என்னை வேறு அறைக்கு மாற்றுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான ஜெயந்தன் என்பவரே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எனினும் குறித்த கோரிக்கையை நிராகரித்த யாழ். நீதவான் நீதிமன்று இவருடைய விளக்கமறியலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
No comments: