அன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்?
பத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.
இணையத்தில் டிரெண்டாகிவரும் பத்து வருட சவால் என்னும் ஒரு சவாலில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Thylane Blondeau (17) தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் தான் ஆறு வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்ட ஒரு படத்தையும், தற்போது 17 வயதில் எடுக்கப்பட்ட ஒரு படத்தையும் அருகருகே பதிவிட்டுள்ளார் அவர்.
2006ஆம் ஆண்டு ஆறு வயதாக இருக்கும்போதே உலகின் அழகான பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் Thylane .
கடந்த ஆண்டு முதல், ஃபாஷன் உலகில் படிப்படியாக வெகு வேகமாக முன்னேறி வருகிறார் அவர்.
தற்போது பிரபலங்கள் பங்கேற்கும் பத்தாண்டு சவால் என்னும் ஆன்லைன் டிரெண்டிங் சவாலில் லேட்டஸ்டாக பங்கேற்றுள்ளார் Thylane.
நான்கே வயதாக இருக்கும்போது பிரபல ஃபாஷன் டிசைனர் ஒருவரின் ஷோவில் பங்கேற்ற Thylane, பிரான்சின் புகழ்பெற்ற ஃபாஷன் பத்திரிகையான French Vogue பத்திரிகையின் அட்டைப்படத்தை அலங்கரித்த மிக இளம் வயதுடையவர் என்னும் புகழையும் பெற்றிருந்தார்.
ஒரு பக்கம் புகழ் வந்து சேர்ந்தாலும், இன்னொரு பக்கம், அவரது படங்கள் விமர்சனங்களுக்கு தப்பவில்லை.
பத்து வயதே ஆன Thylane, Vogue பத்திரிகைக்காக கொடுத்திருந்த ஒரு போஸ், மிக அதிகமாக பாலியல் ரீதியில் அமைந்திருந்ததாக விமர்சிக்கப்பட்டது.
எத்தனை எதிர்மறையான விமர்சனனக்கள் வந்தாலும், தற்போது Thylane வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்துள்ள இணையவாசிகள், உண்மையாகவே அன்றும் இன்றும் அவர் அழகிதான் என்கின்றனர்.
No comments: