Header Ads

Header Ads

இறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் 29 வயதான ரிஹானா. இவர் கடந்த 2012ம் ஆண்டு ஆஸ்திரியாவில் உள்ள செயின்ட் அன்டன் ஸ்கை ரிசார்ட்டில் நண்பர்களோடு பனிசறுக்கில் விளையாடினர்.
அப்போது சக நண்பருடன் மோதி நிலைகுலைந்த ரிஹானா, மற்றொரு எல்லை பகுதிக்கு தூக்கி வீசப்பட்டார்.
இதனை பார்த்து பதறிப்போன அவருடைய நண்பர்கள், 9 நிமிடமாக அவருடைய செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர்.
ஆனால் அவர் தன்னுடைய செல்போனை எடுக்கவில்லை. அதன் பிறகு நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், ரிஹானாவின் கால்பகுதியை கண்டுபிடித்தனர்.
அப்பொழுது அவருடைய உதடு முழுவதும் ஊதா நிறத்திலும், முகம் முழுவதும் வெள்ளை நிறத்திற்கும் மாறியிருந்துள்ளது.
இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த ரிஹானா,
நான் நண்பருடன் மோதியதில் எலும்பு முறிவு ஏற்பட்டு 200மீ தாழ்வான பகுதிக்கு தூக்கி வீசப்பட்டேன். முதலில் பயங்கரமாக கத்தினேன். ஆனால் யாரும் என்னுடைய குரலுக்கு செவி கொடுக்கவில்லை. என்மேல் அந்த அளவு பனி மூடியது.
பிறகு மெதுவாக கத்துவதை குறைத்துவிட்டு, என்னுடைய மூச்சையும் நிறுத்தினேன். அப்போது ஒரு கனவு கண்டேன்: “நான் அமைதியான, வெளிறிய காட்டில் ஒரு பாதையில் நடந்து கொண்டிருந்தேன். அதன் இருபுறமும் பெரிய உயரமான பசுமையான இடத்தை கொண்டிருந்தது.
“வழக்கமான நாள் போல பிரகாசமாக இருந்தது, மிகவும் அமைதியாக இருந்தது. தரையில் பனி படர்ந்திருந்தது. ஆனால் எனக்கு தெரியும் அது பனி இல்லை.”
அப்பொழுது தான் என்னுடைய நண்பர் எனக்கு முத்தம் கொடுத்து எனக்கு உயிர் கொடுத்தார்.
அதன் பிறகு என்னிடம் மருத்துவர் கூறினார், மூச்சுத்திணறலிலிருந்து நான் உயிர் பிழைக்க 6 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருந்தது என தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.