2019 கண்டிப்பாக தீர்வு இது உண்மையா ?
ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போதும் இலங்கை தொடர்பில் பிரேரணை ஒன்றினை பிரதான நாடுகள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காக அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச மேற்பார்வை நீடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை குறித்த விவகாரங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான உறுப்பினர் என்ற வகையில் சுமந்திரன் எம்.பியிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்
No comments: