ஆசைக்காக 56 வயது முதியவரை மணந்த 16 வயது சிறுமி
பணத்துக்காக 56 வயது முதியவருடன் 16 வயது சிறுமிக்கு நடந்துள்ள திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவை சேர்ந்தவர் லிகிலோ (56). மிக பெரிய கோடீஸ்வரர். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் குடும்பத்தார் விரும்பினார்கள்.
அதன்படி வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை லிகிலோவுக்கு மணமுடிக்க முடிவு செய்தனர்.
சிறுமியின் குடும்பத்தாரிடம், சென்று லிகிலோவை திருமணம் செய்தால் அவரின் மொத்த சொத்துக்கள் மற்றும் நிலங்களை சிறுமி தான் பராமரிப்பு செய்வாள் என கூறியுள்ளனர்
இதனால் பணம் மற்றும் சொத்துக்கு மயங்கி சிறுமியை, லிகிலோவுக்கு அவர்கள் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.
இதையடுத்து 56 வயது லிகிலோ உடன் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து பதிவை ஷிபிசர் என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், லிகிலோவை மணந்த சிறுமி பாலியல் அடிமையாக அந்த குடும்பத்தாரால் மாற்றப்படுவார்,
சிறுமியின் வாழ்க்கை நரகமாகும் என்ற அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும், பணத்தை வைத்து ஏழை குடும்பத்தை மூளை சலவை செய்வது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்
No comments: