Header Ads

Header Ads

ஆவியாக வந்து உறவினர்களுக்கு பிரியாவிடை கூறும் பிரித்தானியர்கள்

இறக்கும் தருவாயில் ஒருவர் தங்கள் உறவினர்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்பியிருப்பார், எப்படி பிரியாவிடை கொடுத்திருப்பார் என்பதை, அவர்கள் இறந்தபின் கண் முன் கொண்டுவந்து காட்டும் முயற்சி ஒன்று பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்று நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் பலர் தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு சொல்ல விரும்பும் செய்திகளை பதிவு செய்து வைத்துக் கொண்டு, அவர்கள் இறந்த பிறகு, ஹோலோகிராபிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 

அவர்களது உறவினர்களுக்கு அந்த செய்தியை அளிக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஆவிகள் என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இறந்த நபரின் படமும் பதிவு செய்யப்பட்டு, 3D முறையில் அவர்கள் தங்கள் இறுதி செய்தியை, பிரியாவிடையை, தங்கள் உறவினர்களுக்கு கூறுவர். 

 இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது இறந்தவர்களின் உறவினர் நேரில் வந்து விடை கொடுப்பது போல் இருப்பதால் பார்ப்பவர்களை நிச்சயம் நெகிழ்ச்சியடையச் செய்யும். மிக மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டு மரணத்தருவாயிலிருக்கும் ஆறு பேர் இந்த நிகழ்ச்சிக்காக தங்கள் இறுதி செய்தியை பதிவு செய்துள்ளனர். 

அவர்கள் இறந்தபின் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும். ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், அது இறந்தவர்களின் உறவினர்கள் மனதை நெகிழவைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்பதால் இப்போதே மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

No comments:

Powered by Blogger.