Header Ads

Header Ads

அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்

அமெரிக்காவில் நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக வடக்கு கரோலினா மாநிலம் அறிவித்துள்ளது.வடக்கு கரோலினா பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். 

இதன் காரணமாக, ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க வேண்டும் என அங்குள்ள தமிழ்ச்சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து, மாநில ஆளுநராக உள்ள ராய் கூப்பர் தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்றார். பின்னர் நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக கரோலினா அரசு அறிவித்துள்ளது.


இதற்கான ஆணையை ஆளுநர் ராய் கூப்பர் வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறுகையில், உலகில் நெடுங்காலமாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வரும் பெருமையைக் கொண்ட மொழிகளுள் ஒன்று தமிழ். வடக்கு கரோலினா மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை

செய்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.அதில், தமிழர்களின் அடையாளம் தமிழ் மொழி. உலகில் இன்னும் பயன்பாட்டில் இருக்கும் பழமையான மொழிகளில் ஒன்றும் கூட. வடக்கு கரோலினாவில் வசிக்கும் தமிழர்கள் சிறப்பு மிக்க தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் இங்கு பாதுகாத்து வளர்த்துள்ளனர். தமிழ் மொழியும் நமது கலாச்சார வரலாற்று வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. அதன்படி, தமிழர்களோடு இணைந்து தைப் பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.