வெளிநாட்டில் வேலை வாய்ப்பு இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
வெளிநாடுகளுக்கு 10 ஆயிரம் பயிற்றப்பட்ட இலங்கை தொழிலாளர்களை அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையக் காலத்தில் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு செல்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் பயிற்சிகளை வழங்கிய ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்வோருக்கான குறைந்த பட்ச வேதன அளவு ஒன்றை நிர்ணயிக்க விருப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கூறியுள்ளது.
No comments: