இலங்கையில் 7 மணித்தியாலங்களாக போராடிய வெளிநாட்டு தம்பதியர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள் போராடி நாய் ஒன்றினை காப்பாற்றியுள்ளனர்.
கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான நாளை காப்பாற்ற 7 அரை மணித்தியாலங்கள் போராடிய நெதர்லாந்து தம்பதியர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் நாய் ஒன்று விபத்துக்குள்ளாகி கால் ஒன்று உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற நெதர்லாந்து நாட்டு தம்பதியினர் அதனை அவதானித்துள்ளனர்.
அவர்கள் அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் பயணிக்கும் ரயிலில் கண்டி நோக்கி செல்லவிருந்த இருவராகும்.
இதன்போது பயணத்தை இடையில் நிறுத்திய வெளிநாட்டு தம்பதி, நாய் மீது பரிதாபம் ஏற்பட்டு உடனடியாக கால் நடை வைத்தியர் ஒருவரை அவ்விடத்திற்கு அழைத்து வருவதற்கு முயற்சித்துள்ளனர்.
காலை 9.00 மணியளவில் காலநடை வைத்தியருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் மாலை 4 மணிக்கே அவ்விடத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
சுமார் 7 மணித்தியாலங்கள் இந்த நாயின் காலுக்கு சிகிச்சை வழங்க முயற்சித்த தம்பதி தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் அறிவித்துள்ளார். அவர் உடனடியாக கால்நடை வைத்தியர் ஒருவரை அவ்விடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
7 அரை மணித்தியாலங்கள் செலவிட்டத்தன் பின்னர் அந்த வெளிநாட்டு தம்பதி மகிழ்ச்சியுடன் தங்கள் பயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments: