ஆளுங்கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு? புரளியைக் கிளப்பிய புதிய செய்தி
ஜாதிக ஹெல உறுமையவின் தலைவர் உதய கம்மன்பில, சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றில் ஆளுங்கட்சியாக கருதி செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லா விடயங்களிலும் அரசுக்கே ஆதரவளித்து வருகிறது. எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கட்சி போல் அது செயற்படவில்லை.
எனவே நாடாளுமன்றில் ஆசன இட ஒதுக்கீட்டின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தாது ஆளுங்கட்சி வரிசையில் அமர்த்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் தென்னிலங்கையில் ஒருவித பரபரப்பைத் தோற்றுவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன
No comments: