Header Ads

Header Ads

78 நாடுகளுக்கு வெறும் மூன்று வருடங்களில் பயணம் செய்து உலக சாதனை படைத்த இளைஞன்

உலகின் இளம் வயது சுற்றுலா பயணியாக பெயரிடப்பட்டுள்ள ஸ்பெய்ன் நாட்டவரான ஒஸ்கார் ஹெராரோ ரெகுவானா நேற்று இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். 22 வயதான ஒஸ்கார் இதுவரை 78 நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.
\
இளம் வயதில் அதிக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவராக கின்னஸ் புத்தகத்தில் அவர் தனது பெயரை சேர்க்க முயற்சித்து வருகின்றார். இது தொடர்பில் இலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் எனது பெயர் ஒஸ்கார் ஹெரோரா ரெகுவானா. எனது நாடு ஸ்பெய்ன். எனக்கு தற்போது 22 வயதாகின்றது. நான் தற்போது 78 நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளேன். நான் சிறு வயது முதலே பிடித்த நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளேன். 

எனக்கு 19 வயதாக இருந்த போது நான் தனியாக பயணிக்க நினைத்தேன். நான் 3 வருடங்களில் 78 நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டேன். எனது பெற்றோர் இதனை கொஞ்சம் கூட விரும்பவில்லை. எனினும், நான் பல நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள விரும்புகின்றேன். அந்த நாடுகளின் கலாச்சாரம் அழகுகளை ரசிக்க நான் விரும்புகின்றேன். என்னால் அழகாக பாட முடியாது. எனினும், நான் கிட்டார் ஒன்றை எடுத்துக் கொண்டே செல்வேன். எனது தனிமைக்கு அது மாத்திரமே உள்ளது. நான் கடந்த 15ஆம் திகதி இலங்கைக்கு வந்தேன். புகையிரத மாத்தறைக்கு வந்தேன். இதன் போது பல அழகிய விடயங்களை நான் பார்த்தேன். 

இலங்கை மக்கள் மிகவும் நல்லவர்கள். நட்புடையவர்கள். அதேபோன்று மிரிஜ்ஜ கடல் மிகவும் அழகானது. அழகான இயற்கை வளம் நிறைந்த அழகான கடல்களில் அதுவும் ஒன்றாகும்.இலங்கையின் எல்ல பிரதேசம் உட்பட பல இடங்களுக்கு செல்ல ஆசைப்படுகின்றேன். இவ்வாறு சுற்றுலா பயணம் மேற்கொள்வதென்பது ஒரு சவாலாகும். உண்மையை கூறினால் நான் தொழில் ஒன்றையும் செய்யவில்லை. சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதற்கு பெற்றோர் தான் பணம் வழங்குகின்றார்கள். எனது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் என நான் நம்புகின்றேன். இது எனக்கும் எனது நாட்டிற்கும் பெருமையாகும். அடுத்த சுற்றுலாப் பயணத்திற்கு பாகிஸ்தான் செல்வதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். மீண்டும் ஒரு முறை இலங்கை வருவதற்கு எதிர்பார்க்கிறேன்’ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.