வருகிறது புதிய சட்டம் – கால்நடைகளை பொது இடங்களில் அவிழ்த்துவிட்டால் இதுதான் தண்டனை
உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில் கால்நடைகளை சாலைகளில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கால்நடைகள் சாலைகளில் திரிவது குறைந்தபாடில்லை. எனவே, அபராத தொகை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நொய்டா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி வரும் காலங்களில், ரூ.5000 அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சாலைகள் அல்லது பொது இடங்களில் கால்நடைகளை செல்ல அனுமதிக்கக் கூடாது. அவற்றை சரியான முறையில் கட்டி வைக்கவில்லை என்றால் அபராதத்துடன், உரிய தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: