மத போதகரால் கடத்தப்பட்டு 9 மாதம் நரக வேதனையில் இளம்பெண்
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் பிரபல மத போதகரால் கடத்தப்பட்டு 9 மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளன இளம் பெண் தற்போது தமக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் பகிர்ந்துள்ளார்.
உட்டா மாகாணத்தின் சால்ட் லேக் சிட்டி பகுதியில் குடியிருந்தவர்கள் சம்பவம் நடந்த போது 14 வயதான எலிசபெத் மற்றும் குடும்பத்தினர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி திடீரென்று இவர்களது குடியிருப்புக்குள் நுழைந்த மத போதகர் பிரையன் மிட்செல் தூக்கத்தில் இருந்த எலிசபெத்தை கத்தி முனையில் கடத்தியுள்ளார்.
சத்தம் எழுப்பினால் மொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய மிட்செல் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் விரைந்துள்ளார்.
பின்னர் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு சென்றதும் மிட்செலின் மனைவி வாண்டா சிறுமி எலிசபெத் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி மாற்று உடை ஒன்றை உடுத்த நிர்பந்தித்துள்ளார்.
தொடர்ந்து மிட்செல் ஒரு வாழிபாடு ஒன்றை மேற்கொண்டதாகவும் அதன் பின்னர் வலுக்கட்டாயமாக தன்னை வன்கொடுமை செய்ததாகவும் எலிசபெத் தெரிவித்துள்ளார்.
மிட்செல் தமது அருகே நெருங்குவதை அறிந்த அந்த நொடி தாம் பயத்தில் உறைந்து போனதாகவும், சிறுமி தாம் தம்மை விட்டுவிட கெஞ்சியதாகவும் எலிசபெத் நினைவு கூர்ந்துள்ளார்.
இதனிடையே அடுத்த நாள் காலையில் இந்த விவகாரம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கடத்தல் சம்பவமாக மாறியது.
ஆயிரக்கணக்கான தான்னார்வல தொண்டர்கள்
சால்ட் லேக் சிட்டி பகுதியில் தீவிரமாக தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.
இது வாரங்கள் கடந்து மாதங்கள் என நீண்டுள்ளது. ஆனால் எலிசபெத்தை கடத்தியது மிட்செல் என்ற தகவல் வெளியுலகிற்கு தெரியாமலே இருந்து வந்தது.
இந்த நிலையில், எலிசபெத்திடம் பேசிய மிட்செல், தாம் கடவுளின் தூதுவர் எனவும், எலிசபெத் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதாலையே கடவுள் அவரை தெரிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எலிசபெத் மட்டுமின்றி மிட்செல் பல சிறுமிகளை கடத்தி அவர்களை தமது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
ஆனால் எலிசபெத்திடம் மட்டுமே அவர் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டுள்ளார். ஒரே நாளில் பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், ஆபாச புகைப்படங்களை நிர்பந்தித்து பார்க்க வைத்துள்ளார்.
மதுவும் போதை மருந்தும் பயன்படுத்த வைத்துள்ளார்.
நீண்ட 9 மாத கடுமையான சித்திரவதைக்கு பின்னர் கடும் முயற்சியில் மிட்செலிடம் இருந்து தப்பிய எலிசபெத் தமக்கு நடந்த கொடுமைகளை குடும்பத்தாரிடமும் பொலிசாரிடமும் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மிட்செல் 2010 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார். அவரது மனைவி வாண்டாவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார்.
தற்போது 31 வயதாகும் எலிசபெத் சிறார் பாதுகாப்பு ஆர்வலராக பணியாற்றி வருகிறார்.
No comments: