காதலனால் ஏமாற்றப்பட்ட பெண் கண்ணீர் இறுதி முடிவுக்காக விடை தேடும் நிலை
தமிழகத்தில் காதலித்து ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு இளம் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி குமணன்சாவடி முருகப்பிள்ளை பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவரின் மகள் ஆஷா(21).
இவரும் குமணன்சாவடி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ரவி மகன் வினோத்குமார் (24) என்பவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
அப்போது நண்பர்களாக இருந்த இவர்கள், அதன் பின் காதலர்களாகினர். இதையடுத்து இருவரும் மூன்று ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆஷா தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வினோத்திடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் வினோத் மறுத்து வந்துள்ளார்.
இதனால் ஆஷா இது குறித்து பூந்தமல்லி மகளிர் காவல்நிலையத்தில் 2 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார்.
இதையடுத்து பொலிஸார் வினோத்தை பிடித்து விசாரித்த போது, அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆஷா வீட்டினர் திருமணம் குறித்து பேச தொடர்பு கொண்ட போது, வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து நேற்று ஆஷா தனது காதலன் வினோத்குமாரின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகிறோம். என்னை திருமணம் செய்வதாக கூறியதால், இருவரும் ஜாலியாக பல இடங்களுக்கு சென்று வந்தோம்.
இதனால் 2 முறை கர்ப்பமடைந்தேன்.
வினோத் கூறியதால் கர்ப்பத்தை கலைத்து விட்டேன். அதன்பிறகு என்னுடன் பேசுவதை புறக்கணித்தார்.
இதனால் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன், அபோது அவர் 2 மாதம் கழித்து, திருமணம் செய்வதாக கூறினார். இப்போது அவரும், குடும்பத்தினரும் மறுத்து விட்டனர். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் அங்கிருக்கும் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிஸார் ஆஷாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், அவர் போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட்டார்.
No comments: