சிம்புவின் முன்னாள் காதலிக்கு அமெரிக்க மாப்பிள்ளையுடன் டும்டும்
டெல்லியில் பிறந்த ரிச்சா முதலில் மாடலாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. முதல் படத்திலேயே தெலுங்கு பிரபல நடிகரான ராணா டகுபதி உடன் லீடர் என்ற படத்தில் இவர் ஜோடி சேர்ந்தார். இதையடுத்து வெங்கடேஷ், நாகார்ஜுனா, ரவி தேஜா உள்ளிட்ட பிரபலங்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தமிழில் சிம்புவுடன் ஒஸ்தி என்ற படத்தில் இவர் நடித்திருந்தார்.
கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட ரிச்சா தன்னால் அற்புதமாக நடிக்க முடியும் என்று தன்னை நிரூபித்த படம் மயக்கம் என்ன. தனுஷின் மனைவியாக இப்படத்தில் ரிச்சா நடித்திருப்பார். செல்வராகவன் இயக்கிய இப்படத்தில் ரிச்சாவின் நடிப்பை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.
சிறந்த நடிகைக்கான பல்வேறு விருதுகளும் ரிச்சாவுக்கு இந்த படத்தின் மூலம் கிடைத்தது. ஆனால் இதன் பிறகு திரைத்துறையில் தோன்றாத ரிச்சா சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களை சோகக் கடலில் ஆழ்த்தினார்.
தற்போது அவர் அமெரிக்க நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரிச்சா அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் எம்பிஏ பட்டம் படித்தார். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் ரிச்சா, ஜோ லேஞ்சலா என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த முடிந்துவிட்டதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் சிலருக்கு சோகத்தையும் ஏற்படுத்தக்கூடும். அதே சமயம் ஒஸ்தி படத்தில் நடித்த போது ரிச்சாவுடன் நடிகர் சிம்பு காதல் வயப்பட்டதாக தகவல் வெளியானது. அதே போல் துணை நடிகர் சுந்தர் ராம் என்பவரையும் ரிச்சா காதலித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் அமெரிக்கா மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டியுள்ளார்.
No comments: