இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றம்
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை குறித்த திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன விசேட விருந்துபசார நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் காரணமாக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் தங்களது விண்ணப்பங்களை திணைக்களம் ஏற்றுக்கொள்வதில் காலதாமதப்படுத்துவதாக தெரிவித்து வாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது விருந்துபசார நிகழ்விற்காவே தம்மை காக்க வைத்துள்ளனர் என விண்ணப்பதாரிகள் அறியவே அங்கு தீவிர நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர் மீண்டும் அதிகாரிகள் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு விரைவாக செயற்படுத்துவதில் தொடங்கியதால் அங்கு ஏற்பட்ட பதற்றமான நிலைமை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வந்தது
No comments: