அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்த தலீபான்கள்
அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தையை தலீபான்கள் ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை ஏற்படுத்தும் விதமாக தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இதற்கு தலீபான்களும் சம்மதித்தனர். அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான்கள் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை சவுதி அரேபியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் தலீபான்களோ கத்தார் தலைநகர் தோகாவில்தான் அமைதி பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அமெரிக்கா அதனை ஏற்றுக்கொண்டது.
அதன்படி இருதரப்புக்கும் இடையேயான 2 நாள் பேச்சுவார்த்தை நேற்று தொடங்க இருந்தது. ஆனால் தலீபான்கள் இதில் பங்கேற்க முடியாது எனக்கூறி அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டனர். அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான செயல் திட்டத்தில் தலீபான்களுக்கு உடன்பாடு இல்லாததால் அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: