புலி - கொத்துக் குண்டுகளை கொண்டு அப்பாவித் தமிழ் மக்கள் மீது தாக்குதல்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்திருந்த இறுதிக்கட்ட போரின் போது சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் என அழைக்கப்படும் கொத்துக் குண்டுகளும், இரசாயன ஆயுதங்களையும் கொண்டு அப்பாவித் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிறிலங்கா நாடாளுமன்றில் ஜனவரி ஒன்பதாம் திகதியான இன்றைய தினம் மீண்டும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
போருக்குள் சிக்கிக்கொண்டிருந்த அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தின் உள்ளிட்ட அரச படையினரால் கொத்து குண்டுகளும், இரசாயன ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதற்கு தான் உயிருடன் இருக்கும் ஒரு சாட்சி என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அதேவேளை இந்த கொடூரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வெறும் அரசியல் இலாபத்தை அடைவதற்காகவே இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பினர் முன்வைத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்
No comments: