மகிந்தவை ஆசீர்வதித்ததிற்கு மன்னிப்பு கேட்கும் குருக்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆசிர்வாதம் அளித்ததை குறித்து புலம்பெயர் பிரதேசத்தில் வாழ்ந்துள்ள மக்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளதாக ஜெனீவா சுவிஸ் ஐயரான உமா சங்கர் குருக்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கொழும்பு, விவேகானந்தா மேடு மண்டபத்தில் கடந்த 04ஆம் திகதி கருப்பண்ண சுவாமி விழாவிற்கு மகிந்த ராஜபக்ச வருகை தந்திருந்தார்.
அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் தமக்கு ஏற்பட்டதிற்கு அமைய தாம் சென்றிருந்ததாக தெரிவித்தார்.
மேலும் அவர், அதன் போது மகிந்தவுக்கு விபூதி பூசி ஆசீர்வாதம் செய்தேன். புலம்பெயர் மக்களுக்கும் எனது குடும்பத்தினரும் ஏன் அவருக்கு ஆசீர்வாதம் செய்தேன் என கேள்வி எழுப்பினார்கள். அவர்களுடைய உள் உணர்வுகளையும் ஆதங்கத்தையும் தெரிந்து கொண்டு மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments: