மாடுகளைத் திருடிய மூவருக்கு விளக்கமறியல்! நீதிபதி உத்தரவு
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் வீட்டில் நின்ற மாடுகள் ஐந்தினை திருடிய மூவரை இம்மாதம் 18 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா உத்தரவிட்டார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 32, 41 மற்றும் 19 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கந்தளாய் பேராறு மற்றும் வான்எல பிரதேசத்தில் வீட்டின் கட்டியிருந்த மாடுகள் ஐந்தினைக் திருடிக் கொண்டு சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளார்கள்.
மாட்டு உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேக நபர்களுக்கெதிராக ஏற்கனவே மாடு திருடிய வழக்கொன்றும் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments: