Header Ads

Header Ads

வரலாற்று பூமியில் மோசமாக செயற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்! கொந்தளிக்கும் சிங்கள தேரர்கள்

வராலற்று தொன்மை மிக்க, அனுராதபுரத்தில் அமைந்துள்ள பபலு வெஹெர தூபி மீது ஏறி நின்று முஸ்லிம் இளைஞர்கள் சிலர் புகைப்படம் எடுத்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞர்கள் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த புகைப்படங்கள் பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிறக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்கதும் சமய ஸ்தலமாகவும் கருதப்படும் குறித்த தூபியை அவமதிப்புக்குள்ளாக்கியுள்ள முஸ்லிம் மாணவர்கள் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பௌத்த பிக்குமார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த இளைஞர்கள் மோசமான செயற்பாடு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தூபி மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்த இளைஞர்களின் விபரங்களை சிங்கள ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பௌத்த தகவல் திணைக்களத்தின் பிக்கு ஒருவர் இன்று பிற்பகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, வெளியாகிய புகைப்படங்கள் தொடர்பில் தேசிய செயற்பாட்டு முன்னணியின் அமைப்பாளரினாலும் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைப்பாளர் சுரேஷ் கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெளத்த சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் இந்த புகைப்படங்கள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Powered by Blogger.