ஜெர்மன் பெண்கள் இலங்கையில் செய்த முகம் சுழிக்கை வைக்கும் செயல்
ஹெரோயின் மற்றும் ஆன்சி என்ற போதைபொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணியாக வந்த இரண்டு பெண்களும் வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டு கொண்டு சென்றகொன்டிருந்த போது ஹட்டன், மல்லியப்பு சந்தில் வைத்து குறித்த காரை பொலிஸார் பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போது குறித்த இரண்டு பெண்மனிகளிடம் இருந்து இவ்வாறு ஒரு தொகை போதைபொருள் கைப்பற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யபட்ட இரு பெண்களையும் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
No comments: