வாழைச்சேனை கைகலப்பில் இளைஞர் குத்திக் கொலை: நால்வர் கைது
வாழைச்சேனை - மீராவோடையில் நேற்று பிற்பகல் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதன்போது பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கத்தி மற்றும் முச்சக்கரவண்டி போன்றவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இளைஞர் அணிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கூரிய கத்தியினால் குத்தப்பட்டதில் மீராவோடை கிராமத்தை சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீர் (வயது 16) என்ற இளைஞர் பலியாகியிருந்தார்.
படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞனை சந்தேகநபர்கள் தாங்கள் பயணம் செய்த முச்சக்கரவண்டியில் ஏற்றி சென்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கிடத்தி விட்டுத் தலைமறைவாகி இருந்தனர்.
இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வு அறிக்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளன
No comments: