பணத்திற்காக ஜேர்மன் கணவரை கொலை செய்த காதலி
இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு கணவரை கொலை செய்த தாய்லாந்து பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தை சேர்ந்த அங்க்கானா மோஹம்மர் என்கிற பெண், ஜேர்மனை சேர்ந்த சரச்சாய் சென்செவங் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்.
கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதியன்று சரச்சாய் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது, அடையாளம் தெரியாத இளைஞர் தன்னுடைய கணவரை சுட்டுகொன்றுவிட்டு தப்பித்ததாக அங்க்கானா தெரிவித்திருந்தார்.
ஆனால் விசாரணை முடிவதற்குள்ளாகவே அங்க்கானா, அங்கிருந்து வெளியேறி தாய்லாந்து சென்றுவிட்டார்.
இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தி, அங்க்கானாவை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் தாய்லாந்தின் காஞ்சனபுரி பகுதியில் ரொட்டி கடை வைத்து நடத்தி வந்த அங்க்கானாவை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கணவரை கொலை செய்து, காப்பீட்டு தொகை 1.3 மில்லியன் டொலர்களை கைப்பற்றி சென்றதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இதற்கு அங்க்கானா தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்
No comments: