கணவனை இழந்து தனிவீட்டில் வசித்து வந்த இளம் விதவைக்கு நேர்ந்த பயங்கரம்
தமிழகத்தில் ஆசிட் வீச்சுக்குள்ளான விதவைப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மீது ஆசிட் வீசிய நபர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள ஏற்றக்கோட்டைச் சேர்ந்த கிரிஜா கணவனை இழந்த நிலையில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கொத்தனார் ஜான் ரோஸ் என்பவர் கிரிஜாவிடம் தன்னை மறுமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த கிரிஜா, ஜான்ரோஸ் மீது காவல்நிலையத்தில் ஓராண்டுக்கு முன் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஜான் ரோஸ் கிரிஜா மீது ஆசிட்டை ஊற்றியுள்ளார். காயமடைந்த கிரிஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே ஆசிட் வீசிய ஜான் ரோஸ் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
ஆசிட் வீச்சு மற்றும் தற்கொலை குறித்துத் திருவட்டாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments: