காதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்
அரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் தொட்டறை பகுதியை சேர்ந்த லதா (37) என்பவருக்கும், இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை பகுதியை சேர்ந்த மோசஸ் (37) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்துள்ளது.
இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோசஸ் அபிராமம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதால், குடும்பத்துடன் அங்கேயே குடியேறிவிட்டார்.
லதா தொட்டறை பகுதியில் வசிக்கும்போதே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது.
திருமணத்திற்கும் பின்பும் கூட அந்த பழக்கம் தொடர்ந்ததால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை எழுந்து வந்துள்ளது.
இதனால் லதா கடந்த ஆண்டு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கிருஷ்ணனுடன் வெளியூருக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் லதாவிற்கு போன் செய்த மோசஸ், உனக்கு பாஸ்போர்ட் வந்திருக்கிறது. அதற்கான பொலிஸ் விசாரணை நடைபெற்று வருவதால், வந்து கையெழுத்து போட்டுவிட்டு பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள் என கூறியுள்ளார்.
இதனை நம்பி லதாவும் பேருந்தில் அபிராமம் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு தயாராக காத்துக்கொண்டிருந்த மோசசுக்கம் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை கொண்டு மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே லதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: