காமெடி நடிகர் பிரம்மானந்தத்துக்கு ஏற்பட்ட சோகம்
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு படவுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் பிரம்மானந்தம். இவருக்கு வயது 62. பல மொழிகளில் 1000க்கும் மேல் படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழில், கில்லி, சரோஜா, மொழி, பயணம், வானம், வாலு, தானா சேர்ந்த கூட்டம் உள்பட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2009ல் பத்ம விருது பெற்றுள்ளார். இவருக்கு கடந்த ஞாயிறுக்கிழமை கடுமையான மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுள்ளார்.
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இவரை, மும்பையிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டது பரிசோதனையில் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பிரம்மானந்தத்துக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள அவர், உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவரின் மகன்கள் ராஜ கவுதம், சித்தார்த் அவரை கவனித்து வருகின்றனர்.
No comments: